தேவையான பொருட்கள்:
மஷ்ரூம் – 250 கிராம்,
கார்ன்ஃப்ளார், மைதா – தலா 50 கிராம்,
பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1
வெங்காயத் தாள் - 1
பொடித்த இஞ்சி, பூண்டு – தலா 1 ஸ்பூன்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 1
சிவப்பு மிளகாய் விழுது - தேவைக்கேற்ப
சோயா சாஸ், வெள்ளை மிளகுத் தூள் – தேவைக்கேற்ப
சில்லி ஃப்ளேக்ஸ் - தேவைக்கேற்ப
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – தேவைக்கேற்ப
செய்முறை:
1. மஷ்ரூமை நன்கு கழுவி, இரண்டாக வெட்டிக் கொள்ளவும். அதை மைதா, கார்ன் ஃப்ளார், உப்பு கலவையில் பிரட்டி, எண்ணெயில் பொரித்துத் தனியே எடுத்து வைக்கவும்.
2. கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்துப் பச்சை வாடை போக வதக்கவும்.
3. பிறகு மிளகாய் விழுது (சிவப்பு மிளகாயை வேக வைத்து, அரைத்தது) சேர்த்து வதக்கவும். குறைந்த தணலில் வைத்து, சோயா சாஸ், வெள்ளை மிளகுத் தூள் சேர்த்துக் கிளறவும்.
4. பின்னர், தேவையான உப்பு சேர்த்து, பொரித்து வைத்துள்ள மஷ்ரூமை சேர்த்துக் கிளறி, சில்லி ஃப்ளேக்ஸ் வெங்காயத் தாள் தூவிப் பரிமாறவும்.
இப்போது சால்ட் அண்ட் பெப்பர் மஷ்ரூம் ரெடி....