Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒரு கோடி அப்பு... விலை குறைக்கப்பட்ட பிரபல ஸ்மார்ட்போன்!

Advertiesment
ஒரு கோடி அப்பு... விலை குறைக்கப்பட்ட பிரபல ஸ்மார்ட்போன்!
, செவ்வாய், 8 ஜனவரி 2019 (14:55 IST)
இந்தியாவில் குறைந்த காலகட்டத்தில் விற்பனையில் சாதனை படைத்து முன்னணி நிறுவனங்களான சாம்சங், ஆப்பிள் ஆகியவற்றை பின்னுக்கு தள்ளியது சியோமி நிறுவனம். 
 
பட்ஜெட் ஸ்மார்ட்போன் விற்பனையில் இந்திய மார்க்கெட்டில் தனி இடத்தை பிடித்துள்ள சியோமி, தனது Mi ஏ2 ஸ்மார்ட்போனின் விலையை குறைப்பதாக நேற்று அறிவித்திருந்தது. தற்போது இதனை தொடர்ந்து ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலையை குறைப்பதாக அறிவித்துள்ளது. 
 
ஆம், இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஒரு கோடி யூனிட்கள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளதால் இந்த விலை குறைப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 
 
சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ சிறப்பம்சங்கள்:
# 5.99 இன்ச் 2160x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி.+ 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
# 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட்
# அட்ரினோ 509 GPU, ஆண்ட்ராய்டு 7.1.2 நௌக்கட் சார்ந்த MIUI 9
# 4 ஜிபி / 6 ஜிபி ராம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
# ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட், கைரேகை மற்றும் இன்ஃப்ராரெட் சென்சார்
# 12 எம்பி பிரைமரி கேமரா, சோனி IMX486 செனசார், f/2.2 அப்ரேச்சர், டூயல்-டோன் எல்டி பிளாஷ்  
# 5 எம்பி பிரைமரி கேமரா, f/2.0 அப்ரேச்சர் 
# 20 எம்பி செல்ஃபி கேமரா, சோனி IMX376 சென்சார், f/2.2 அப்ரேச்சர், எல்இடி பிளாஷ்
# 4000 எம்ஏஹெச் பேட்டரி
 
விலை: 4 ஜிபி ராம், 64 ஜிபி மெமரி ரூ.12,999; 6 ஜிபி ராம், 64 ஜிபி மெமரி ரூ.13,999. புதிய விலை குறைப்பட்ட ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட், அமேசான் மற்றும் சியோமியின் Mi வலைத்தளம் மற்றும் ஆஃப்லைன் விற்பனையகங்களில் கிடைக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து – வடப்போச்சே மூடில் உதயநிதி ஸ்டாலின்