Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரைவசி பாலிசி பிரச்சனை: வாட்ஸ் ஆப் பதில்!!

Advertiesment
பிரைவசி பாலிசி பிரச்சனை: வாட்ஸ் ஆப் பதில்!!
, வியாழன், 21 ஜனவரி 2021 (09:34 IST)
பிரைவசி பாலிசி விவகாரம் தொடர்பாக மத்திய அரசு வாட்ஸ் ஆப்பிற்கு எழுதிய கடிதத்திற்கு பதில் கிடைத்துள்ளது. 

 
தகவல் பரிமாற்றத்திற்காக உலகம் முழுவதும் 5 பில்லியனுக்கும் அதிகமானோரால் பயன்படுத்தப்பட்டு வரும் வாட்ஸப் சமீபத்தில் புதிய நிபந்தனைகள் மற்றும் தனிநபர் கொள்கைகளை வெளியிட்டது. இதன்மூலம் தனிநபர் தகவல்களை வாட்ஸப் சேமிக்கப்போவதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
அதை தொடர்ந்து பலர் வாட்ஸப்பை விடுத்து டெலிகிராம், சிக்னல் போன்ற செயலிகளுக்கு மாறி வருகின்றனர். இந்நிலையில் தங்கள் புதிய கொள்கைகள் குறித்து வாட்ஸப் தொடர்ந்து விளக்கம் அளித்து வருகிறது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் விளக்கமளிக்க பேஸ்புக் நிறுவன அதிகாரிகளுக்கு மத்திய தொழில்நுட்ப துறைக்கான நாடாளுமன்ற குழு உத்தரவிட்டிருந்தது.
 
இந்நிலையில் சர்ச்சைக்கு இடம் கொடுக்கும் புதிய தனியுரிமை பாதுகாப்பு கொள்கைகள் வாட்ஸாப் திரும்ப பெற வேண்டுமென வாட்ஸ் ஆப்பின் தலைமை செயல் அதிகாரிக்கு மத்திய அரசிடமிருந்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. 
 
இது குறித்து வாட்ஸ் ஆப் செய்தி தொடர்பாளர் கூறியதாவது, புது அப்டேட் பேஸ்புக்குடன் தரவுகளை பகிர்வது தொடர்பாக எந்த வசதியையும் வழங்கவில்லை என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறோம். எங்களின் நோக்கம் வியாபாரங்கள் தங்களது வாடிக்கையாளர்கள் சிறப்பான  சேவையை வழங்கி வளர்ச்சி பெறுவதற்கான வசதியை வழங்குவது தான்.
 
வாட்ஸ் ஆப் எப்போதும் தனிப்பட்ட குறுந்தகவல்களை முழுமையான என்க்ரிப்ஷன் மூலம் பாதுகாக்கும். இதனால் வாட்ஸ் ஆப் அல்லது பேஸ்புக் அவற்றை பார்க்க முடியாது. தவறான தகவல் பரவுவதை சரி செய்யவும், எந்த விதமான கேள்விகளுக்கும் பதில் அளிக்க நாங்கள் எப்போதும் காத்திருக்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சசிகலாவுக்கு கொரோனாவா? மூச்சுதிணறலுக்கான காரணம் என்ன??