சிக்னலுக்கு வழி இல்லை, ஆனால் அன்லிமிட்டெட் ஆஃபர்...

Webdunia
சனி, 17 மார்ச் 2018 (12:55 IST)
தொலைத்தொடர்பு துறையில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது வாடிக்கையாளர்களுக்கு லாபத்தை கொடுக்கிறது. ஆனால், சமீபத்தில் சிக்னல் பிரச்சனைகளும் அதிக அளவில் உள்ளது. 
 
இந்நிலையில், வோடபோன் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகையை அறிவித்துள்ளது. ரூ.18-க்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்த சலுகையில் அன்லிமி்ட்டெட் டேட்டா வழங்கப்படுகிறது. 
 
திரைப்படங்கள், பாடல்கள், கேமிங் அல்லது அதிக மெமரி கொண்ட தரவுகளை டவுன்லோடு செய்ய இந்த சலுகை சிறப்பானதாக இருக்கும் என கூறப்படுகிறது. ரீசார்ஜ் ஆக்டிவேட் ஆனதில் இருந்து ஒருமணி நேரத்திற்கு அன்லிமிட்டெட் 3ஜி / 4ஜி டேட்டா வழங்கப்படும்.
 
ஆனால், தற்போது பெரும்பாலான தொலைத்தொடர் நிறுவன சிக்னல்கள் சரியாக கிடைப்பதில்லை. ஏர்செலில் துவங்கி, அடுத்து ஜியோ, ஏர்டெல், வோடபோன் என இந்த பிரச்சனை நீள்கிறது.
 
இதனால் என்ன சலுகை வழங்கினாலும், சிக்னல் இருக்க வேண்டும் அல்லவா என்பது வாடிக்கையாளர்களின் குரலாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுக கூட்டணி அமித்ஷாவால் திணிக்கப்பட்ட ஒரு பிளாக்மெயில் கூட்டணி: முதல்வர் ஸ்டாலின்..!

234 தொகுதிகளிலும் விஜய் டெபாசிட் கூட வாங்க மாட்டார்.. தராசு ஷ்யாம் கணிப்பு..!

குடியரசு தின விழாவிற்காக வேலை வாங்கிய பள்ளி நிர்வாகம்.. 8ஆம் வகுப்பு மாணவி பரிதாப பலி..!

வடநாட்டு அரசியலில் திருப்பம் என ரஜினி சொன்னது.. வைரமுத்துவின் பொய்க்கவிதை: நயினார் நாகேந்திரன்..

கூட்டணிக்கு வரலைல்ல.. விஜய்யை வச்சு செய்யும் டிடிவி, நயினார் நாகேந்திரன், செல்லூர் ராஜு..!

அடுத்த கட்டுரையில்
Show comments