Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வோடபோன் கைவிட்ட நிலையில், ஏர்டெல் ஜியோவை நாடும் ஏர்செல்!

Advertiesment
ஏர்செல்
, வெள்ளி, 2 மார்ச் 2018 (20:14 IST)
ரூ.15,500 கோடி கடன் ஏற்பட்டதை அடுத்து திவால் என அறிவிக்க கோரி ஏர்செல் நிறுவனம் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் மனு அளித்தது. 
 
அதன்படி ஏர்செல் நிறுவனத்தின் சேவை வரும் ஏப்ரல் 15 ஆம் தேதியுடன் முழுவதுமாக நிறுத்தப்படும் என டிராய் அறிவித்துள்ளது. எனவே, ஏர்செல் வாடிக்கையாளர்கள் போர்ட் எண் மூலம் வேறு நெர்வொர்க்கு மாற முயற்சித்து வருகின்றனர். 
 
மேலும், வாடிக்கையாளர்கள் தங்கள் சேவையை வேறு நெட்வொர்க்கு மாற்றிக்கொள்ள கால அவகாசம் நீடித்து கொடுக்கப்பட்டுள்ளதாக டிராய் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் ஏர்செல் வோடவோன் நிறுவனக்கள் இணைவதாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் இது கைவிடப்பட்டது. 
 
இந்நிலையில், கடன் சுமையில் சிக்கி தவிக்கும் ஏர்செல் நிறுவனம் ஏர்டெல், ஜியோ  நிறுவனங்களுடன் இணைந்து சேவை வழங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிஸ்டம் மாற வேண்டும். ரஜினியின் கருத்தை முன்மொழிந்த வருண்காந்தி