ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் ஆண்டு விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு ரூ.12க்கு விமான டிக்கெட் தொடங்கும் என சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்த கட்டணத்தில் விமான சேவை வழங்கி வரும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தனது 12வது ஆண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தைரடி சலுகையை அறிவித்துள்ளது. விமனத்தில் பயணிக்க கட்டணம் ரூ.12 முதல் ஆரம்பிக்கும் என தெரிவித்துள்ளது.
இந்த அதிரடி சலுகை உள்நாடு மற்றும் வெளிநாடு விமான சேவை இரண்டிற்கும் பொருந்தும். இன்று முதல் மே 28 ஆம் தேதி வரை இந்த சலுகையில் புக்கிங் செய்து கொள்ளலாம். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
அதுவும் ஜூன் 26 முதல் அடுத்த ஆண்டு மார்ச் 24ஆம் தேதி வரை இந்த சலுகை விலை மூலம் பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் நடத்தும் போட்டியில் கலந்துக்கொண்டு வெற்றி பெறுபவர்களுக்கு பரிசாக இலவச டிக்கெட் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.