Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹலோ மோட்டோ: ஒரே நேரத்தில் களமிறங்கும் 4 போன்கள்?

Webdunia
சனி, 29 டிசம்பர் 2018 (14:22 IST)
மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ஜி7 சீரிஸ் கொண்ட நான்கு ஸ்மார்ட்போன்களை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்ய உள்ளது. இந்நிலையில் இந்த ஸ்மார்ட்போன்கள் குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
 
மோட்டோ ஜி7, மோட்டோ ஜி7 பிளஸ், மோட்டோ ஜி7 பிளே மற்றும் மோட்டோ ஜி7 பவர் என நான்கு புதிய ஸ்மார்ட்போன்களை ஒரே நேரத்தில் பிரேசிலில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.
 
1. மோட்டோ ஜி7 மற்றும் மோட்டோ ஜி7 பிளஸ் ஸ்மார்ட்போன்களில் வாட்டர் டிராப் வடிவம் கொண்ட நாட்ச் வழங்கப்படலாம். 
 
2. மோட்டோ ஜி7 பிளே மற்றும் மோட்டோ ஜி7 பவர் உள்ளிட்டவற்றில் வழக்கமான நாட்ச் டிஸ்ப்ளே வழங்கப்படலாம்.
 
3. மோட்டோ ஜி7 மற்றும் ஜி7 பிளஸ் ஸ்மார்ட்போன்களில் டூயல் பிரைமரி கேமரா செட்டப் வழங்கப்படலாம்.
 
4. மோட்டோ ஜி7 பிளே மற்றும் மோட்டோ ஜி7 பவர் உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களில் ஒற்றை பிரைமரி கேமரா வழங்கப்படலாம். 
 
5. மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர், 3 ஜிபி ராம், 32 ஜிபி.மெமரி மற்றும் 4 ஜிபி ராம், 64 ஜிபி மெமரி என இருவித வேரியன்ட்களில் கிடைக்கும். 
 
6. மோட்டோ ஜி7 பிளஸ் ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர், 4 ஜிபி / 6 ஜிபி ராம், 64 ஜிபி மெமரியில் கிடைக்கும். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எடப்பாடியை எக்குத்தப்பாய் பேசிய ஆதவ் அர்ஜூனா! - தன் பேச்சு குறித்து வருத்தம்!

தலித்துக்கள் திருமண மண்டபத்தில் திருமணம் செய்வதா? தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள்..!

திமுகவின் தொடர் வெற்றிக்கு காரணம் கூட்டணி தான்: மதுரையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு..!

மாநிலங்களவையில் 2 சீட்டுகளுமே அதிமுக வேட்பாளர்கள்! அதிர்ச்சியில் தேமுதிக? - அடுத்த முடிவு என்ன?

பாஜக அரசைக் கண்டித்து பொதுக்குழுவில் திமுக தீர்மானம்!

அடுத்த கட்டுரையில்
Show comments