Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜியோ நியூ இயர் ஆஃபர்: ரூ.399-க்கு ரீசார்ஜ் செய்தால், ரூ.3,300-க்கு கேஷ் பேக்

Advertiesment
ஜியோ நியூ இயர் ஆஃபர்: ரூ.399-க்கு ரீசார்ஜ் செய்தால், ரூ.3,300-க்கு கேஷ் பேக்
, வெள்ளி, 28 டிசம்பர் 2018 (17:56 IST)
புத்தாண்டு நெருங்கிவிட்டது இன்னும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சலுகைகளை வழங்கவில்லையே என வாடிக்கையாளர்கள் எதிர்ப்பார்த்து வந்த நிலையில் ஜியோ நியூ இயர் ஆஃபரை அறிவித்துள்ளது.
 
ஆம், ஜியோ தனது பிரைம் வாடிக்கையாளர்களுக்கு ரூ.399 அல்லது அதற்கு மேல் ரீசார்ஜ் செய்தால் ரூ.3,300 சர்ப்ரைஸ் கேஷ்பேக் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
அதாவது, ரூ.399 அல்லது அதற்கு மேல் ரீசார்ஜ் செய்யும் போது உடனடியாக மைஜியோ செயலிக்கு ரூ.400 கேஷ்பேக் அனுப்பப்படும். இதையே ஜியோ ஆப் மூலம் ரீசார்ஜ் செய்தால் ரூ.50 மதிப்புள்ள 8 வவுச்சர்கள் வழங்கப்படும். 
 
மேலும், மொபைல் வாலெட் மூலம் ரீசார்ஜ் செய்தால் ரூ.300 வரை கேஷ் பேக் அழங்கப்படும். இதனுடன் சிறப்பு சலுகையாக ரூ.2,600 வரை ஷாப்பிங் வவுச்சர் வழங்கப்படும். 
 
ஏற்கனவே, வோடபோன் நியூ இயர் ஆஃபரை வழங்கியுள்ளது. ஆனால் இப்போது ஜியோ வழங்கியுள்ள ஆஃபரை பார்த்தால் மற்ற நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை கவர இதை விட பலமான ஆஃபர் வழங்க வேண்டும் போல் இருக்கிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கள்ள மதுபான பாரா? அரசு மதுபான பாரா? கரூரில் கோஷ்டி மோதல்...