Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சவரன் ரூ.50,000ஐ தொடும்.. குறைய வாய்ப்பே இல்லையா? – தங்கம் விலையால் மக்கள் அதிர்ச்சி!

Advertiesment
சவரன் ரூ.50,000ஐ தொடும்.. குறைய வாய்ப்பே இல்லையா? – தங்கம் விலையால் மக்கள் அதிர்ச்சி!

Prasanth Karthick

, சனி, 9 மார்ச் 2024 (10:04 IST)
தமிழகத்தில் தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில் இன்றும் கடுமையான உயர்வை சந்தித்துள்ள நகைப்பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.



சர்வதேச அளவில் தங்கம் ஏற்றுமதி இறக்குமதியில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. சமீபமாக சீனா உள்ளிட்ட நாடுகள் தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளதால் இந்தியாவில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
வரலாற்றில் இல்லாத அளவு சென்னையில் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த 5 நாட்களாக நாள் ஒன்றுக்கு ரூ.200க்கு குறையாது விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. கடந்த 5 நாட்களில் மொத்தமாக தங்கம் விலை ரூ.1,760 உயர்ந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.49,200க்கு விற்பனையாகி வருகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.6,150 ஆக உள்ளது. இனி வரும் காலங்களில் தங்கம் விலை குறையுமா என மக்கள் எதிர்பார்க்கும் நிலையில் இன்னும் சில மாதங்களுக்காவது தங்கம் விலை உடனடியாக குறைய வாய்ப்பில்லை என தொழில் நிபுணர்கள் கூறுகின்றனர். தங்கம் விலை உயர்வு நகைப்பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை.. என்ன காரணம்?