ரூ.12,999-க்கு சூப்பர் ஸ்மார்ட்போன்: அசத்தும் சாம்சங்!!

வியாழன், 19 மார்ச் 2020 (12:06 IST)
சாம்சங் நிறுவனம் தனது சாம்சங் கேலக்ஸி M21 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. 
 
இந்த வருடத்தின் துவக்கம் முதலே சாம்சங் நிறுவனம் அடுத்தடுத்த பல ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது சாம்சங் கேலக்ஸி M21 ஸ்மார்ட்போன் அறிமுகம் ஆகியுள்ளது. 
 
மிட்நைட் பிளாக் மற்றும் ராவென் பிளாக் நிறங்களில் அறிமுகம் ஆகியுள்ள சாம்சங் கேலக்ஸி M21 ஸ்மார்ட்போனின் விலை ரூ. 12,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை மார்ச் 23 ஆம் தேதி அமேசான் தளத்தில் துவங்குகிறது. 
 
சாம்சங் கேலக்ஸி எம்21 சிறப்பம்சங்கள்:
# 6.4 இன்ச் 2340x1080 பிக்சல் FHD+ இன்ஃபினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
# கார்னிங் கொரில்லா கிளாஸ் 3, ஆக்டாகோர் எக்சைனோஸ் 9611 பிராசஸர்
# மாலி-G72MP3 GPU, ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யு.ஐ. 2.0
# 4 ஜிபி LPDDR4x ரேம்,  64 ஜி.பி. / 128 ஜி.பி. UFS 2.1 மெமரி
# டூயல் சிம், கைரேகை சென்சார்
# 48 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
# 8 எம்.பி. 123° அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, f/2.2
# 5 எம்.பி. டெப்த் சென்சார், f/2.2
# 20 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
# 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் மோடி பெயரில் போலி ட்வீட்: லீவ் எடுக்க இப்படி ஒரு ரூட்டா?