தங்க நகைக் கடனுக்கு அதிகபட்சம் ரூ.20,000 மட்டுமே ரொக்கமாக வழங்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.
ரூ.20,000த்திற்கு மேலான நகைக் கடன் தொகையை காசோலையாக வழங்க வேண்டும் எனவும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
ரொக்கமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் நடவடிக்கையாக ரிசர்வ் வங்கி இந்த உத்தரவை வெளியிட்டுள்ளது என் தெரியவந்துள்ளது.
முன்னதாக தங்க நகைக் கடன் தொகை அதிகபட்சமாக ஒரு லட்ச ரூபாயாக இருந்தது. தற்போது 20,000 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
இதனால் தங்க நகைக்கடன் பிரிவில் செயல்பட்டு வரும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் இழப்பை சந்திக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.