தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் உலகம் முழுவதும் பெட்ரோல் தேவை விரைவில் குறையும் என்பதால் பெட்ரோலின் விலையும் குறையும் என அமெரிக்க தொழில் வல்லுனர் டோனி சீபா தெரிவித்துள்ளார்.
டோனி சீபா சோலார் மின்சாரம் உலகை ஆளும் என முன்பு கணித்தார். அதேபோல் சோலார் மின்சாரம் உலகம் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது பெட்ரோல் தேவை மற்றும் அதன் விலை இன்னும் 5 வருடங்களில் குறையும் என தெரிவித்துள்ளார்.
அவரது கணிப்பு உண்மையாக வாய்ப்புள்ளது. அவர் குறிப்பிடும் காரணமும் ஏற்றுக்கொள்ளும் வகையில் அமைந்துள்ளது. தற்போது உலகம் முழுவதும் இந்த செல்ப் டிரைவிங் கார் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. இன்னும் சில காலங்களில் இந்த கார்கள் தான் உலகை ஆளும். இந்த கார்கள் அனைத்தும் முழுவதுமாக மின்சாரத்தில் இயங்க கூடியது.
இதனால் இன்னும் 5 வருடங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் தேவை குறையும். அதைத்தொடர்ந்து விலையும் சரியும். டோனி சீபா கணிப்புப்படி பார்த்தால் இந்தியாவில் இன்னும் 10 வருடங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.30 க்கும் கீழ் குறையலாம்.