Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

7வது முறையாக பான் - ஆதார் இணைப்பு கால அவகாசம் நீடிப்பு!

7வது முறையாக பான் - ஆதார் இணைப்பு கால அவகாசம் நீடிப்பு!
, செவ்வாய், 1 அக்டோபர் 2019 (13:09 IST)
பான் கார்ட்டுடன் ஆதார் எண்ணை இணைக்கும் கால அவகாசத்தை 7வது முறையாக நீடித்துள்ளது மத்திய அரசு. 
 
பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், செப்டம்பர் 30 ஆம் தேதியே இணைப்பிற்கான கடைசி நாள் என கூறியிருந்தது. அவ்வாறு செய்யாவிட்டால் பான் கார்ட் செல்லுபடி ஆகாது என தெரிவிக்கப்பட்டது. 
 
ஆனால், செப்டம்பர் 30 ஆம் தேதி வந்ததும் மீண்டும் இணைப்பிற்கான தேதியை நீடித்து அறிவித்துள்ளது. ஆம், பான் கார்டுடன் ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடுவை வரும் டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. 
webdunia
அப்படி வரும் டிசம்பர்  31 ஆம் தேதிக்குள் ஆதார் எண்ணும் பான் கார்டும் இணைக்கப்படவில்லை என்றால் அந்த பான் கார்ட் முடக்கப்பட்டு, புதிய பேன் கார்டுக்கு விண்ணபித்து வாங்க வேண்டிய சூழல் ஏற்படும். 
 
பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டுமானால் வருமான வரித்துறையின் https://www.incometaxindiaefiling.gov.in/home என்ற இணையதளத்துக்கு சென்று இணைக்கவும்.  
 
மேலும், ஆதார் எண் பான் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க, https://www1.incometaxindiaefiling.gov.in/e-FilingGS/Services/AadhaarPreloginStatus.html என்ற லிங்கை பயன்படுத்தவும். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தீபாவளிக்கு முன்னர் வருமானவரி குறைக்கப்படுமா? மக்கள் எதிர்பார்ப்பு!