Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆதாருடன் பான் எண்ணை இணைக்க மேலும் அவகாசம்: மத்திய அரசு அறிவிப்பு!

Advertiesment
ஆதாருடன் பான் எண்ணை இணைக்க மேலும் அவகாசம்: மத்திய அரசு அறிவிப்பு!
, ஞாயிறு, 29 செப்டம்பர் 2019 (07:31 IST)
பான் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு செப்டம்பர் 30 வரை என்றும் இதற்குமேல் அவகாசம் கிடையாது என்றும் மத்திய நேரடி வரிகள் வாரியம் கறாராக அறிவித்திருந்த நிலையில் தற்போது மீண்டும் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது
 
இதன்படி பான் கார்டு எண் உடன் ஆதார் எண்ணை இணைக்க இந்த ஆண்டு டிசம்பர் 31 வரை நீட்டக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. பான் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் பான் எண் காலாவதி ஆகிவிடும் என்று கூறியிருந்தாலும் வங்கி தொடர்பான அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் பான் எண் அவசியமாகியிருப்பதால், அந்த எண்ணையும், பராமரித்து வருவது தேவையாகியிருக்கிறது என்பதால் மீண்டும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
 

webdunia
பான் எண்ணுடன் ஆதார் எண்ணை கட்டாயமாக இணைக்க வேண்டும் என்றும் இந்த ஆண்டு டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ள இந்த கால அவகாசத்தை பயன்படுத்தி அனைவரும் இந்த இரு எண்களையும் இணைக்க வேண்டும் என்றும் மத்திய நேரடி வரிகள் வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது
 
பான் - ஆதார் எண்களை எப்படி இணைப்பது: முதலில் incometaxindiaefiling.gov.in என்ற தளத்திற்கு செல்ல வேண்டும். அதன்பின்  Quick Links என்பதன்கீழ் Link Aadhaar கிளிக் செய்து திரையில், பான் எண், ஆதார் எண் உள்ளிட்டவற்றை பதிவிட்டு இரு எண்களையும் இணைத்துக் கொள்ளலாம். ஒருவேளை ஏற்கெனவே இணைக்கப்பட்டிருந்தால், அது குறித்த தகவல் காண்பிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இடைத்தேர்தல் – அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்து தேமுதிக அறிக்கை !