ரிலையன்ஸ் ஜியோ அறிமுகமாகி இரண்டு ஆண்டுகளுக்குள் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமாக உள்ளது. மேலும் இது இந்திய டெலிகாம் துறையில் பெரும் மாற்றத்தை உருவாக்கியுள்ளது.
சமீபத்தில் ஜியோபிற்காக டிரைவர்ஸ் ஆஃப் சேஞ்ச் எனும் விருதை முகேஷ் அம்பானி பெற்றார். அப்போது அவர் ஜியோ உருவாக முதல் காரணியாக இருந்தது இஷா தான் என தெரிவித்திருக்கிறார்.
வாழ்நாள் முழுக்க இலவச அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், மலிவு விலையில் மொபைல் டேட்டா உள்ளிட்டவை ஜியோவின் அசுர வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகிறது.
இத்துடன் மொபைல் டேட்டா மட்டுமின்றி வீடுகள், வியாபார மையங்கள் மற்றும் கார்களை இண்டர்நெட் உடன் இணைப்பதற்கான பணிகளை ஜியோ மேற்கொண்டு வருகிறதாம்.