ரிலையன்ஸ் ஜியோ ரீசார்ஜ் கட்டணங்கள் விரைவில் உயர்த்தப்படும் வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
முகேஷ் அம்பானி சமீபத்தில் நடைபெற்ற 42 வது ஆண்டு ரிலையன்ஸ் பொதுக்கூட்டத்தில் பல அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் குறிப்பிடப்பட்ட பல திட்டங்கள் மற்ற நிறுவனங்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அமைந்துள்ளது.
இந்நிலையில், ரிலையன்ஸ் ஜியோ அதன் விலை சார்ந்த நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஆம், ஜியோ இந்தியாவில் அதன் மொபைல் சேவைகளுக்கான கட்டணத்தை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜியோவின் இலக்கு 500 மில்லியனாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த அளவிலான எண்ணிக்கையை அடைய ஜியோ நிறுவனத்திற்கு நிதி தேவைப்படும். இந்த நிதியை திரட்ட ஜியோ ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தும் என தெரிகிறது.
அதோரு கடன் இல்லா நிறுவனமாக மாறவும் மற்ற நிறுவனங்களில் ரூ.9,000 கோடி முதலீடு செய்யவும் தேவைப்படும் நிதியை மொபைல் வாடிக்கையாளர்களிடமிருந்து பெற திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாக நிலையில், விலை உயர்வுக்கான சாத்தியகூறுகள் அதிகமாவே இருப்பதாக கூறப்படுகிறது.