Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Tuesday, 1 April 2025
webdunia

வர்த்தகத்தை புரட்டிபோடும் அம்பானி!! ஆயில், பெட்ரோ கெமிக்கல் டீலிங் ஓவர்

Advertiesment
ரிலையன்ஸ் ஜியோ
, செவ்வாய், 13 ஆகஸ்ட் 2019 (13:30 IST)
சவுதி அரேபியாவுடன் ஆயில் மற்றும் பெட்ரோ கெமிக்கல் ஒப்பந்தத்தை ரிலையன்ஸ் நிறுவனம் வெற்றிகரமாக முடித்துள்ளது. 
 
ரிலையன்ஸ் குழும வருடாந்திர மாநாடு மும்பையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் புதிய அறிவிப்புகள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முகேஷ் அம்பானி பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பல அறிவிப்புகளை வெளியிட்டார். அதோடு சில எதிர்பாராத அறிவிப்புகளை வெளியிட்டார்.  
 
குறிப்பாக ரிலையன்ஸ் ஆயில் மற்றும் பெட்ரோ கெமிக்கல்  வர்த்தகத்தில் உள்ள 20% பங்கினை சவுதி அராம்கோ நிறுவனத்திற்கு விற்கும் ஒப்பந்தம் குறித்து செய்தி வெளியிட்டு எண்ணெய் மற்றும் பெட்ரோ கெமிக்கல் வர்த்தக்கத்தை புரட்டிப்போட்டுள்ளார். 
webdunia
ஆம், இந்த ஒப்பந்தத்தின் மூலம் சவுதி அராம்கோ நிறுவனம் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜாம் நகர் சுத்திகரிப்பு நிலையத்துற்கு தினசரி 5,00,000 லட்சம் பேரல்கள், கச்சா எண்ணெய் நீண்ட கால அடிப்படையில் சப்ளை செய்ய வேண்டும். இந்த ஒப்பந்தத்தின் இந்திய மதிப்பு சுமார் 5.3 லட்சம் கோடி ரூபாயாகும்.
 
ரிலையன்ஸ் நிறுவனத்தின் வரலாற்றிலேயே இவ்வளவு பெரிய அளவிலான பங்கு விற்பனை என்பது இதுதான் என முகேஷ் அம்பானி இந்த ஒப்பந்தம் குறித்து தெரிவித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கார் ஓட்டும் அழகிய பூனை: வைரலாகும் வீடியோ