Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விடாது துரத்தும் ஜியோ: அசராமல் நிற்கும் ஏர்டெல்!

Advertiesment
விடாது துரத்தும் ஜியோ: அசராமல் நிற்கும் ஏர்டெல்!
, செவ்வாய், 15 மே 2018 (10:51 IST)
ஐபிஎல் விளம்பரம் விவகாரத்தில் ஏர்டெல் மீது வழக்கு தொடர்ந்த ஜியோ தற்போது ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் விவகாரத்தில் மீண்டும் குற்றம்சாட்டியுள்ளது. 
 
ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் இந்தியாவில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 சாதனத்தை மே 11 ஆம் தேதி முதல் விற்பனை செய்து வருகின்றன. 
 
ஆப்பிள் வாட்ச் மற்றும் ஐபோன் பயன்படுத்துவோர் ஒரே சிம் கார்டு கொண்டு ஐபோன் மற்றும் வாட்ச் சாதனங்களில் பயன்படுத்த முடியும். ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 சாதனத்தில் இ-சிம் வசதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் டிராயிடம் ஏர்டெல் மீது குற்றஞ்சாட்டியுள்ளது. ஏர்டெல் நிறுவனம் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 சாதனங்களுக்கு வழங்கும் சில சேவைகளில் விதிமுறை மீறல்களில் ஈடுபடுவதாக இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.  
 
நடவடிக்கையோடு நிறுத்தாமல், ஏர்டெல் உடனடியாக இந்த சேவையை நிறுத்த உத்தரவிட வேண்டுமென ஜியோ கேட்டுக்கொண்டுள்ளது. ஆனால், ஏர்டெல் இதுகுறித்து எந்த பதிலும் அளிக்கவில்லை. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

118 இடங்களில் முன்னிலை ; தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் பாஜக?