Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜிஎஸ்டி குறைப்பு எதிரொலி! ஆயிரக்கணக்கில் விற்பனையாகும் கார்கள்!

Prasanth K
செவ்வாய், 23 செப்டம்பர் 2025 (14:59 IST)

கார்கள் மீதான ஜிஎஸ்டி சமீபத்தில் குறைக்கப்பட்ட நிலையில் கார் விற்பனை அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

 

இந்தியா முழுவதும் ஜிஎஸ்டி வரிகள் பயன்பாட்டில் உள்ள நிலையில், சமீபத்தில் மத்திய அரசு ஜிஎஸ்டி வரிகளை 5 மற்றும் 18 சதவீதத்திற்குள் கொண்டு வந்ததால் பல பொருட்களில் விலையும் கணிசமாக குறைந்துள்ளது. முக்கியமாக கார் மாடல்களின் விலைகள் ஆயிரம் முதல் சில லட்சங்கள் வரை குறைந்துள்ளது.

 

நேற்று ஜிஎஸ்டி சீர்திருத்தம் அமலான நிலையில் அதற்கு முன்பே கார் நிறுவனங்கள் வரி குறைக்கப்பட்ட கார்களில் விலை விவரத்தை வெளியிட்டிருந்தன. இந்நிலையில் நேற்று நவராத்திரியின் முதல் நாளிலேயே மாருதி சுசுகி நிறுவனம் 30 ஆயிரம் கார்களையும், ஹூண்டாய் நிறுவனம் 11 ஆயிரம் கார்களையும் விற்றுள்ளதாக தெரிவித்துள்ளன. மற்ற நிறுவன கார்கள் உள்ளிட்டவற்றையும் கணக்கிட்டால் நேற்று மட்டுமே 50 ஆயிரத்திற்கும் அதிகமான கார்களை மக்கள் வாங்க புக் செய்திருக்கலாம் என கணிக்கப்படுகிறது. அதுபோல பைக் விரும்பிகளும் புதிய பைக்குகளை புக்கிங் செய்ய ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பூடான் ராணுவ காரை வாங்கினாரா துல்கர் சல்மான்? சுங்கத்துறை அதிரடி சோதனை..!

நயினார் நாகேந்திரனை அடுத்து திடீரென டெல்லி செல்லும் ஆளுனர் ரவி.. அமித்ஷாவை சந்திக்கிறாரா?

ஜிஎஸ்டி குறைப்பில் மாநில அரசின் பங்கை மறைக்கிறார்கள்! - முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

அக்டோபரில் சட்டமன்ற கூட்டம்.. தேதியை அறிவித்த சபாநாயகர் அப்பாவு..!

சென்னை ஒன் செயலியை பயன்படுத்துவது எப்படி? ஒரு விரிவான தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments