Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வாட்ஸ் ஆப்பிற்கு ஆப்பு வைக்க களமிறங்கும் கூகுள் அலோ

வாட்ஸ் ஆப்பிற்கு ஆப்பு வைக்க களமிறங்கும் கூகுள் அலோ
, வியாழன், 22 செப்டம்பர் 2016 (12:59 IST)
கூகுள் அலோ, கூகுளின் புது ஆண்ட்ராய்டு சேவை. கூகுளில் உள்ள எல்லா சேவைகளையும் இணைத்து, இந்த அலோ மெசெஞ்சரை உருவாக்கியுள்ளது கூகுள் நிறுவனம்.

 
கூகுள் அலோ:
 
வாட்ஸ் அப் போலவே போன் நம்பர் கொடுத்துதான் 'அலோ' வைப் பயன்படுத்த முடியும். அத்துடன் கூகுள் அக்கவுன்ட் மற்றும் பெயரைக் கொடுத்து அலோவைப் பயன்படுத்தத் துவங்கலாம். இரு நம்பர்களை ஒரே அக்கவுன்ட்டில் பயன்படுத்த முடியாது. அதே போல், அக்கவுன்ட்டை வெவ்வேறு இரண்டு போன்களில் பயன்படுத்தவும் முடியாது.
 
கூகுள் அலோ இதில் என்ன புதிது??
 
இது மெசேஜிங் ஆப் என்பதால், மற்றவைகளில் இருப்பது போன்ற வாய்ஸ் மெசேஜ், ஸ்டிக்கர்ஸ், இமேஜ், வீடியோ என எல்லா வசதிகளும் இருக்கின்றன. ஆனால் வாட்ஸ் அப் போன்ற வாய்ஸ் காலிங் வசதி இதில் இல்லை. டாக்குமென்ட்களையும் இதில் அனுப்ப முடியாது. 
 
இதில் வரும் மெசேஜ்களுக்கு ஆப்பைத் திறக்காமலேயே பதிலளிக்க முடியும். பதிலளிக்க விருப்பம் இல்லையென்றாலும், மெசேஜில் இருக்கும் கருத்தை வைத்து ஆராய்ந்து, ரிப்ளை செய்வதற்கான பரிந்துரைகளையும் அலோ வழங்குகிறது. அதனை செலெக்ட் செய்தால் போதும். அதுவே ரிப்ளை செய்துவிடும். இதனால் மெசேஜை படித்து ரிப்ளை செய்ய டைப் செய்ய தேவையில்லை.

இதன் ஹைலைட்:
 
அலோவின் ஹைலைட் கூகுள் அசிஸ்டன்ட்தான். ஹைக்கில் இருக்கும் நடாஷா போலவே, விர்ச்சுவல் அசிஸ்டன்ட் வாயிலாக இயங்கும் இந்த கூகுள் அசிஸ்டன்ட்தான் அலோவை, மற்ற மெசேஜிங் ஆப்களில் இருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. 
 
இந்த விர்ச்சுவல் அசிஸ்டன்ட் மூலம், அலோ ஆப்பிற்குள்ளேயே, பிரவுசரை திறக்காமல் விக்கிபீடியா பயன்படுத்த முடியும். காலண்டர், மெயில், அலாரம் என பல விஷயங்களை இந்த அசிஸ்டன்ட் மூலமாகவே செயல்படுத்திக் கொள்ள முடியும். 
 
வாட்ஸ்அப் போல, இது முழு என்கிரிப்ட் செய்யப்பட்டது கிடையாது. ஆனால், அதே சமயம்  Incognito mode-ல் சாட் செய்வதன் மூலமாக, மெசேஜ்களை என்கிரிப்ட் செய்துகொள்ள முடியும். சாட் செய்யும் மெசேஜ்களை குறிப்பிட்ட நேரத்திற்கு பின்பு டெலிட் செய்துவிடலாம். 5 விநாடிகள் முதல் ஒருவாரம் வரை இதற்கு டைம் செட் செய்து கொள்ளலாம். அதன்பின்பு நமது உரையாடல்கள் அழிந்துவிடும். 
 
அதே போல, அலோ ஆப் பயன்படுத்துபவர்களிடம் மட்டுமே நாம் சாட் செய்ய முடியும். ஒருவேளை அலோ இன்ஸ்டால் செய்யாத நபருக்கு, நீங்கள் அலோ மூலம் மெசேஜ் அனுப்பினால், அது போனுக்கு எஸ்எம்எஸ் ஆக சென்று விடும். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நயன்தாராவின் காதலன் இயக்க சூர்யா நடிக்கும் படத்தின் பெயர் அறிவிப்பு!