நடிகர் சூர்யா தற்போது ஹரி இயக்கத்தில் 'எஸ்-3' படத்தில் நடித்து வருகிறார். அப்படம் வருகிற டிசம்பர் மாதம் 16-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், 'நானும் ரவுடி தான்' என்ற படத்தை இயக்கிய நயன்தாராவின் காதலன் விக்னேஷ் சிவன், அடுத்து, சூர்யா நடிக்கும் படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கு 'தானா சேர்ந்த கூட்டம்' என பெயரிடப்பட்டுள்ளது.
இதி, சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கும் கதாநாயகி யார் என்பது முடிவு செய்யப்படவில்லை. ஆனால் அது நயன்தாரா இல்லை என்பது மட்டும் முடிவு செய்யப்பட்டுவிட்டது.
அனிருத் இசையமைக்கும், இப்படத்தை 'ஸ்டூடியோ கிரீன்' ஞானவேல்ராஜாவும், சூர்யாவின் '2டி என்டர்டெயின்மென்ட்' நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.