அதிரடியாக குறைந்த தங்கம் விலை! அட்ஷய திருதியையில் ஆச்சர்யம்!

Webdunia
சனி, 22 ஏப்ரல் 2023 (09:26 IST)
இன்று அட்சய திருதியை கொண்டாடப்படும் நிலையில் தங்கம் விலை குறைந்துள்ளது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தங்கம் வாங்க நல்ல நாளான அட்சய திருதியை இன்று கொண்டாடப்படுகிறது. இன்றும் நாளையும் கொண்டாடப்படும் அட்சய திருதியை திருநாளில் தங்கம் வாங்கினால் வீட்டில் செல்வம் சேரும். இந்நிலையில் இன்று தங்கம் வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இன்றைய நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.44,840 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல ஒரு கிராம் தங்கம் விலை ரூ.60 குறைந்து ரூ.5,605க்கு விற்பனையாகி வருகிறது.

ஒரு கிராம் வெள்ளியின் விலை 90 காசுகள் குறைந்து ரூ.80.40க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை குறைந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செல்போன் வாங்கி தராத அப்பா.. விரக்தியில் கிணற்றில் விழுந்து உயிர்நீத்த 20 வயது மகன்..!

சென்னைக்கு மீண்டும் மழை.. தேதி குறித்த வானிலை ஆய்வாளர்..!

சென்னை ஜிஎஸ்டி அலுவலகத்தில் தீவிபத்து: முக்கிய ஆவணங்கள் சேதம்!

த.வெ.க.வுடன் கூட்டணியா? - டிடிவி தினகரனின் பதில் இதுதான்!

பெரியார் மண்ணில் தவெக பொதுக்கூட்டம்!.. செங்கோட்டையன் போடும் மெகா ஸ்கெட்ச்!..

அடுத்த கட்டுரையில்
Show comments