Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தங்கம் விலை மீண்டும் உயர்வு.. ஒரே நாளில் 200 ரூபாய் அதிகம்..!

Siva
திங்கள், 13 ஜனவரி 2025 (09:54 IST)
கடந்த சில நாட்களாக தங்கம் விலை படிப்படியாக உயர்ந்து கொண்டே வரும் நிலையில் இன்றும் தங்கம் விலை ஒரு கிராமுக்கு 25 ரூபாயும் ஒரு சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்துள்ளது. மேலும் 24 காரட் தூய தங்கம் 8000 ரூபாயை தாண்டி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரங்களை பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரு கிராம் 25 ரூபாய் உயர்ந்து   7,340 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் 200 ரூபாய் உயர்ந்து விலை ரூபாய்   58,720 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 8,005 எனவும் ஒரு சவரன் ரூபாய் 64,040 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 102.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய்  102,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பட்டிமன்ற பிரபலம் சாலமன் பாப்பையா மனைவி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்

டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்பு விழா: இந்திய தரப்பிலிருந்து செல்லும் விஐபி யார்?

ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் கிடையாது: அரசின் அதிரடி உத்தரவு..!

இனி சப்டைட்டில் தேடி அலையத் தேவையில்லை! VLC கொடுத்த புது AI அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments