இந்தியாவில் இண்டர்நெட் பயனர்கள் குறித்த அறிக்கை ஒன்றை பாஸ்டன் கன்சல்டிங் குரூப் என்ற ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
அறிக்கையின் முக்கிய தகவல்கள்:
# இந்தியாவில் இண்டர்நெட் பயன்படுத்துபவர்களில் 40 % பேர் பெண்கள்.
# இண்டர்நெட் பயன்படுத்துவோரில் ஐந்தில் நான்கு பேர் மொபைல் போன் மூலமாகவே இண்டர்நெட் பயன்படுத்தி வருகின்றனர்.
# இந்தியாவில் 3ஜி இணைப்பு பயன்படுத்துவோர் எண்ணிக்கை 25 கோடிகளாக அதிகரிக்க சுமார் எட்டு ஆண்டுகள் ஆனது.
# ஜியோவின் 4ஜி நெட்வொர்க்கில் 10 கோடி பேர் சுமார் ஏழு மாதங்களில் இணைந்துள்ளனர்.
# சுமார் 8 முதல் 9 கோடி பேர் ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்குகின்றனர்.
#ஆண்டிற்கு சராசரியாக ரூ.4,500 கோடி முதல் ரூ.5,000 கோடி டாலர்களை செலவிடுகின்றனர்.
# 2025 ஆம் ஆண்டு இந்தியாவில் மட்டும் 85 கோடி பேர் இண்டர்நெட் பயன்படுத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது.