இந்தியா மீது ரூ:37,400 கோடி நஷ்ட ஈடு வழக்கு
, புதன், 13 ஜூலை 2016 (11:25 IST)
பிரிட்டனின் எண்ணெய் அகழ்வு நிறுவனம் இந்தியாவிடம் ரூ:37,587 கோடி நஷ்ட ஈடு கேட்டு சர்வதேச தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
பிரிட்டன் எண்ணெய் அகழ்வு நிறுவனம் சர்வதேச தீர்ப்பாயத்தில் 160 பக்க இழப்பீட்டு மனுவை ஜூன் 28ஆம் தேதி தாக்கல் செய்தது. இந்தியா, இங்கிலாந்து இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை இந்தியா மீறிவிட்டது என்று நஷ்ட ஈடு கேட்டதற்கான காரணத்தை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கை ஜெனீவாவைச் சேர்ந்த நடுவர் லாரென் லெவி தலைமையிலான மூவர் குழு விசாரிக்கிறது.
பிரிட்டன் எண்ணெய் அகழ்வு நிறுவனத்தின் துணை நிறுவனமான கெய்ர்ன் இந்தியா நிறுவனம் 2011ஆம் ஆண்டு பெரும் பாலான பங்குகளை விற்றுவிட்டது. 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வருமான வரித்துறை ரூ:10,247 கோடி வரி செலுத்துமாறு நேட்டீஸ் அனுப்பியது. இதனால் அந்நிறுவனத்தின் பங்குகள் கடுமையாக சரிந்தன.
இதற்காக 105 கோடி டாலர் இழப்பீடு வழங்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளது. அந்த ஆண்டு மீண்டும் வரித்துறை அனுப்பிய நேட்டீஸில் ரூ:18,800 கோடி தொகையை வட்டியுடன் செலுத்துமாறு அதில் கூறப்பட்டிருந்தது.
முதலீட்டு ஒப்பந்தத்தை மீறியதற்காக கெய்ர்ன் இந்தியா நிறுவனத்துக்கு ஏற்பட்ட இழப்பீடு உள்ளிட்டவற்றை சேர்த்து மொத்தம் ரூ. 37,400 கோடி நஷ்ட ஈடு இந்தியா வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மொத்த இழப்பீட்டுத் தொகையானது கெய்ர்ன் இந்தியா நிறுவனம் மீது விதிக்கப்பட்ட வரித்தொகைக்கு இணையானது.
அடுத்த கட்டுரையில்