Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

50% கேஷ்பேக்: தாமதமாய் வரிந்துக்கட்டும் பிஎஸ்என்எல்...

Advertiesment
50% கேஷ்பேக்: தாமதமாய் வரிந்துக்கட்டும் பிஎஸ்என்எல்...
, சனி, 10 பிப்ரவரி 2018 (15:21 IST)
ஜியோ சலுகைகள் மற்றும் கேஷ்பேக் சேவைகளை வாரி வழங்குவதால் மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தங்களது பங்கிற்கு சலுகைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனமும் சலுகை வழங்கியுள்ளது. 
 
பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் பிரீபெயிட் ரீசார்ஜ்களுக்கு அதிகபட்சம் 50% வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது. பிளிப்கார்ட்-இன் போன்பெ செயலி மூலம் ரீசார்ஜ் செய்வோர் 50% கேஷ்பேக் பெற முடியும்.
 
ரூ.250-க்குள் ரீசார்ஜ் செய்யும் போது அதிகபட்சம் ரூ.50 வரை கேஷ்பேக் பெற முடியும். போன்பெ சேவையை கொண்டு முதல் ஐந்து பிஎஸ்என்எல் ரீசார்ஜ் செய்வோருக்கு மட்டுமே இந்த கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
 
போன்பெ மூலம் வழங்கப்படும் பிஎஸ்என்எல் கேஷ்பேக் சலுகை பிப்ரவரி 20 ஆம் தேதி வரை வழங்கப்படும். மேலும் பிஎஸ்என்எல் அதிகாரப்பூர்வ வலைதளத்தின் மூலம் ரீசார்ஜ் செய்யும் போது இந்த கேஷ்பேக் சலுகைகள் கிடைக்கும். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொய் சொன்ன அருண் ஜெட்லி: குட்டு வைத்த ராகுல் காந்தி!