இந்தியா ராணுவத்திற்காக விமானங்கள் வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்தான காரசாரமான விவாதங்களை எதிர்க்கட்சியான காங்கிரஸ் நாடாளுமன்றத்தில் முன் வைக்கின்றன.
இந்தியா ரஃபேல் ரக விமானங்களை பிரான்ஸ் நாட்டில் இருந்து வாங்கியது. இதன் விலை விவரங்களை முன் வைக்குமாறு காங்கிரஸ் கட்சி கோரிக்கை வைத்து வருகிறது. காரணம் அதில் முறைகேடு நடந்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அதனை வெளியிடுவது தேச பாதுகாப்பிற்கு நல்லதல்ல என பாஜக சமாளித்து வருகிறது.
இந்நிலையில் மாநிலங்களவையில் பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, காங்கிரஸ் கட்சியும் தங்கள் ஆட்சி காலத்தில் ராணுவ செலவீனங்களை பட்டியலிடவில்லை. ஆனால் இதனை பாஜக மீது காங்கிரஸ் ஒரு ஊழல் முத்திரையாக குத்த பார்க்கிறது என கூறியிருந்தார்.
இதனையடுத்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இதற்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார் டுவிட்டர் மூலமாக. அதில், அன்பிற்குரிய அருண் ஜெட்லை(Lie) ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ராணுவ செலவினங்களை பட்டியலிட்டதில்லை என்று கூறினீர்கள். ஆனால், மூன்று முறை எங்கள் ஆட்சியில் ராணுவ செலவினங்கள் மற்றும் விலைப்பட்டியல்களை முன்வைத்திருக்கிறோம்.
இப்போது உங்கள் பிரதமரிடம் போய் ரஃபேல் விமானங்களை வாங்கியதற்கான உண்மைத் தொகையை தெரியப்படுத்தச் சொல்லுங்கள் என குட்டு வைத்துள்ளார். மேலும் அந்த பதிவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களையும் இணைத்துள்ளார்.