Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிஎஸ்என்எல் மேக்சிமம் VS ஜியோ ப்ரைம்....

பிஎஸ்என்எல் மேக்சிமம் VS ஜியோ ப்ரைம்....
, வியாழன், 15 பிப்ரவரி 2018 (15:04 IST)
இந்தியாவின் பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் ஜியோவை எதிர்கொள்ள பிஎஸ்என்எல் மேக்சிமம் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. 
 
மேக்சிமம் பிரீபெயிட் திட்டம் ரூ.999க்கு கிடைக்கும். இந்த புதிய திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள். மேலும், தினமும் 1 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. 1 ஜிபி டேட்டா நிறைவுற்றதும், டேட்டா வேகம் நொடிக்கு 40Kbps ஆக குறைக்கப்படும். 
 
அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், ரோமிங், தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை முதல் 182 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. 182 வது நாள் முதல் 365 நாட்கள் வரை கட்டணம் செலுத்த வேண்டும். 
 
பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் வாய்ஸ் கால்களுக்கு நிமிடத்திற்கு 60 பைசா. இது உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளுக்கு பொருந்தும். எஸ்எம்எஸ் ஒன்றிற்கு 25 பைசாவும், தேசிய எஸ்எம்எஸ் அனுப்ப 35 பைசா செலுத்த வேண்டும். 
 
ரிலையன்ஸ் ஜியோ இதை விட அதிக சலுகைகளை வழங்கினாலும்,  இதன் விலை ரூ.4,999 மற்றும் ரூ.9,999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. எனவே, பிஎஸ்என்எல் மேக்சிமம் குறைந்த விலையில், சேவைகள் வழங்குகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அப்போ இல்லாத ஞானதேயம் இப்போது ஏன்? ஸ்டாலினை தாக்கிய ஓபிஎஸ்