ஐய் ஜாலி!! WFH Dude-களுக்கு டெய்லி 5ஜிபி BSNL டேட்டா ஃப்ரீ...

சனி, 21 மார்ச் 2020 (13:36 IST)
பிஎஸ்என்எல் நிறுவனம் வீட்டில் இருந்தே வேலை செய்பவர்களுக்கு தினமும் 5 ஜிபி டேட்டா இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது. 

 
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அரசு மற்றும் தனியார் ஊயியர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி வீட்டில் இருந்து வேலை செய்பவர்களுக்காக [email protected] என்னும் டேட்டா ப்ளானை பிஎஸ்என்எல் அறிமுகம் செய்துள்ளது. 
 
ஆம், பிஎஸ்என்எல் நிறுவனம் தனது லேண்ட்லைன் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் இலவச இணைய சேவையை [email protected] என்னும் டேட்டா ப்ளான் மூலமாக வழங்குகிறது. இந்த சேவையின் கீழ் தினமும் 5ஜிபி டேட்டா இலவசமாக ஒரு மாதத்திற்கு வழங்கப்பட உள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் கோரொனா பீதி: சட்டப்பேரவையை முன்கூட்டியே முடிக்க முடிவு!!