அமுல் நிறுவனம் ஆன்லைன் மூலம் பால் பொருட்களை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.
குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தும் கூட்டமைப்பு, அமுல் என்ற பெயரில் பால் மற்றும் பால் பொருட்களை விற்பனை செய்து வருகிறது. நாடு முழுவதும் அமுல் நிறுவனத்தின் டீலர்கள் சுமார் 10,000 நபர்கள் உள்ளனர்.
இந்நிலையில் அமுல் நிறுவனம், தனது தயாரிப்புகளை இனையதளம் மூலம் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
தற்போது பலரும் இனையதளம் மூலம் பொருட்கள் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். எங்கள் நிறுவனமும் பால் மற்றும் பால் பொருட்களை இணையதளத்தில் விற்க முடிவு செய்துள்ளது. வாடிக்கையாளர்கள் இணையதளத்தில் பதிவு செய்யும் அன்றே பால் டெலிவரி செய்யப்படும். இந்த திட்டம் அக்டோபர் 1ஆம் தேதி முதல் செயல்பாட்டிற்கு வரும், என்று தெரிவித்தார்.