Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்த ஸ்மார்ட்போன் யூஸ் பண்றீங்களா... இந்த ஏர்டெல் சேவை உங்களுக்குதான்!!

இந்த ஸ்மார்ட்போன் யூஸ் பண்றீங்களா... இந்த ஏர்டெல் சேவை உங்களுக்குதான்!!
, புதன், 11 டிசம்பர் 2019 (15:05 IST)
ஏர்டெல் நிறுவனத்தின் வைபை காலிங் வசதி அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட்டுள்ளது. 
 
வோ வைபை என்ற பெயரில் துவங்கப்பட்டுள்ள இந்த சேவை தற்போது டெல்லியில் மட்டும் செயல்பாட்டில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்த சேவையின் மூலம் வாடிக்கையாளர்கள் அதிவேகமாக சீரான தரத்தில் அழைப்புகளை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
எனினும், இந்த சேவையை வாடிக்கையாளர்கள் ஏர்டெல் பிராட்பேண்ட் அல்லது ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஃபைபர் நெட்வொர்க்கில் இணைந்து இருக்கும் போது மட்டுமே பயன்படுத்த முடியும்.
 
அதேபோல ஏர்டெல் நிறுவனத்தின் வைபை காலிங் சேவை தற்சமயம் ஐபோன் எக்ஸ்.ஆர்., ஐபோன் 6எஸ், ஐபோன் 6எஸ் பிளஸ், ஐபோன் 7, ஐபோன் 7 பிளஸ், ஐபோன் எஸ்.இ., ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ் , ஐபோன் எக்ஸ், ஐபோன் எக்ஸ்.எஸ்., ஐபோன் எக்ஸ்.எஸ். மேக்ஸ், ஐபோன் 11, ஐபோன் 11 ப்ரோ, ஒன்பிளஸ் 7, ஒன்பிளஸ் 7 ப்ரோ, ஒன்பிளஸ் 7டி, ஒன்பிளஸ் 7டி ப்ரோ, போகோ எஃப்1, ரெட்மி கே20, ரெட்மி கே20 ப்ரோ, சாம்சங் கேலக்ஸி ஜெ6, சாம்சங் கேலக்ஸி ஆன் 6, சாம்சங் கேலக்ஸி எம்30எஸ், சாம்சங் கேலக்ஸி ஏ10எஸ் போன்ற மாடல்களில் மட்டும் வேலை செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2021ல் அதிசயம் கண்டிப்பாக நிகழும்! – ரஜினி அண்ணன் உறுதி!