Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவுட்கோயிங் கால் ரிங்கிங் டைம்-ஐ 25 செக்கெண்டாக குறைத்த ஏர்டெல்!

Webdunia
புதன், 2 அக்டோபர் 2019 (11:48 IST)
ஏர்டெல் நிறுவனம் அவுட்கோயிங் கால் ரிங்கிங் டைம்-ஐ 25 விநாடிகளாக குறைப்பதாக டிராய்-க்கு கடிதம் எழுதியுள்ளது. 
 
இதுநாள் வரை அனைத்து நெட்வொர்க் நிறுவனங்களும் அவுட்கோயிங் கால்களுக்கான ரிங்கிங் நேரத்தை 45 விநாடிகளாக வைத்திருந்தது. ஆனால், சமீபத்தில் ரிலையன் ஜியோ நிறுவனம் தனது ரிங்கின் நேரத்தை அதிரடியாக் 20 விநாடிகளாக குறைத்தது. 
 
இதனை ஏர்டெல் நிறுவனம் கடுமையாக எதிர்த்து டிராய்-க்கு புகார் கடிதம் ஒன்றை வழங்கியது. மேலும், ஜியோ தனது முடிவை மாற்றாவிட்டால் தாங்களும் ரிங்கிங் நேரத்தை குறைக்க நேரிடும் என ஏர்டெல் தெரிவித்திருந்தது. 
இதன் பின்னர் டிராய் அறிவுறுத்தலை ஏற்று ரிலையன்ஸ் ஜியோ தனது ரிங்கிங் நேரத்தை 20 விநாடிகளில் இருந்து 25 விநாடிகளாக அதிகரித்தது. இருப்பினும் ஜியோ செயலால் கடுப்பானது ஏர்டெல்.  
 
இந்நிலையில் ஏர்டெல் நிறுவனம் தற்போது, தனது ரிங்கிங் நேரத்தை 24 விநாடிகளாக குறைக்க உள்ளோம் என டிராய்-க்கு கடிதம் அனுப்பியுள்ளது. மேலும், வோடபோன் ஐடியா நிறுவனமும் அடுத்து தனது ரிங்கிங் நேரத்தை குறைக்கும் என எதிர்ப்பார்க்க்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாரம் முழுவதும் நெகட்டிவ்.. இன்றும் பங்குச்சந்தை சரிவு.. முதலீட்டாளர்கள் அச்சம்..!

சிறையில் உள்ள சவுக்கு சங்கர் மீது இன்னொரு வழக்கு: மீண்டும் கைது செய்த போலீசார்..!

6 ஆண்டுகளுக்கு பின் பேருந்து கட்டணம் உயர்வு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

பொங்கல் தினத்தில் யுஜிசி நெட் தேர்வு தேதிகள் அறிவிப்பு.. கடும் எதிர்ப்பு கிளம்புமா?

சென்னை உள்பட 6 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்

அடுத்த கட்டுரையில்
Show comments