ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள கிரேடு சி பணியிடங்களுக்கான தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் உள்ள வங்கிகளின் பணிகளை ரிசர்வ் வங்கி கண்காணித்து வருகிறது. மேலும் ரூபாய் நோட்டு அச்சடித்தல் மற்றும் புழக்கம் ஆகியவற்றையும் ரிசர்வ் வங்கியே மேற்கொண்டு வருகிறது. இந்த ரிசர்வ் வங்கியில் பணிபுரியும் பணியாளர்கள் நாடு முழுவதிலும் இருந்து தேர்வு முறையில் தேர்வு செய்யப்படுகின்றன.
தற்போது ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 63 கிரேடு சி காலிப் பணியிடங்களுக்கான பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதியாக ஜனவரி 8 ஆகும்.
வணிகவியல், பொருளாதாரம்,புள்ளியல், நிதியியல் மற்றும் பொருளாதாரக் கணிதம் ஆகிய பிரிவுகளில் முதுலைப்பட்டம் பெற்ற 35 வயதுக்குட்பட்ட பட்டதாரிகள் இத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணமாக பட்டியலினத்தவர்களுக்கு 100 ரூபாயும் மற்ற பிரிவினர்களுக்கு 600 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.