Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அல்சர் பிரச்சனைக்கு அற்புத நிவாரணம் தரும் ரோஜா பூ !!

Paneer Rose
, திங்கள், 25 ஏப்ரல் 2022 (13:38 IST)
அல்சர் என்பது குடற்புண்கள் ஆகும். இப்போது இருக்கும் தலைமுறையில் சிறியவர் முதல் பெரியவர் வரை இந்த அல்சரினால் அவதிப்படுகிறார்கள்.


அல்சர் இருப்பவர்களுக்கு எப்போதும் ஒரு குமட்டல் இருந்துக்கொண்டே இருக்கும். சரியான அளவு உணவு எடுத்துக்கொள்ள இயலாமல் அவதிபடுவர்.

அல்சர் உள்ளவர்களுக்கு மார்பின் கீழ் வயிற்றுக்கு சற்று மேல் அதாவது விலா எலும்புகள் முடிவு பெரும் அந்த இடத்தில் எப்போதும் சிறு வலி இருந்துக்கொண்டே இருக்கும்.

தேவையான பொருட்கள்: ரோஜா பூ  - 1 பன்னீர் ரோஜா மிக நல்லது. பன்னீர் ரோஜா இல்லையெனில் சாதாரண நாட்டு ராஜாவையும் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அதில் வண்ணம் மிகுந்த ரோஜா, பெங்களூரு ரோஜா அல்லது ஊட்டி ரோஜா போன்றவற்றை தவிக்கவும்.

தண்ணீர்  - 1 /4 லிட்டர், தயிர்  -1 தேக்கரண்டி (மிகவும் புளித்த தயிரை எடுத்துக்கொள்ளக் கூடாது. நல்ல புதுமையான தயிரை சேர்ப்பது நல்லது). கல்லுப்பு  - தேவையான அளவு. சிறு சீரகம் - சிறிதளவு.

செய்முறை: ரோஜா பூவை நன்றாக கழுவிக்கொண்டு அதை சிறிது சிறிதாக வெட்டி ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொள்ளவும். அதில் ஒரு தேக்கரண்டி தயிரை சேர்த்துக்கொள்ளவும். அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து, அதில் நீரை ஊற்றி நன்கு கலந்து கொள்ளவும். தேவையெனில் சிறு சீரகத்தின் பொடியை ஒரு சிட்டிகை அளவு சேர்த்துக்கொள்ளலாம்.

இந்த ரோஜாவுடன் கலந்த மோரை உணவுக்கு பின் ஒரு 5 நிமிடத்திற்கு பிறகு அருந்தலாம். இவ்வாறு ஒரு நாளைக்கு 3 வேலையும் உணவுக்குப் பின் இதை எடுத்துக்கொண்டால் தயிருடன் சேர்த்த ரோஜாவின் இதழில் உள்ள துவர்ப்பு தன்மை குடற்புண்களை எளிதில் நீக்கிவிடும்.

அல்சரினால் அவதிப்படுவோர், வயிற்றில் வலி வரும்போது இதனை எடுத்துக்கொண்டால் அல்சரினால் வரும் அந்த வலி உடனே காணாமல் போகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எப்படியெல்லாம் நெல்லிக்காயை பயன்படுத்தி ஆரோக்கியம் பெறலாம்...!!