Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நீரழிவு நோயை கட்டுக்குள் வைத்திருக்க உதவும் கருஞ்சீரகம் !!

diabetes
, சனி, 23 ஏப்ரல் 2022 (13:47 IST)
வைட்டமின்கள், அமினோ அமிலங்கள், சோடியம், கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, புரதம், ஆல்கலாய்டுகள் என ஏராளமான ஊட்டச்சத்துக்கள் கருஞ்சீரகத்தில்  நிரம்பியுள்ளன.


கருஞ்சீரகத்தை சாப்பிடுவதனால் நமது உடம்பிற்கு பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கின்றன. உடல் சார்ந்த பல விதமான நோய்களுக்கு கருஞ்சீரகம் ஒரு மிகச் சிறந்த மருந்தாக திகழ்கிறது.

உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை நீக்க கருஞ்சீரகம் மிகவும் உதவக்கூடியது. இதனால் இதய நோய் நம்மை நெருங்காமல் பாதுகாத்துக் கொள்ளவும், இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் கருஞ்சீரகம் உதவும்.

நீரழிவு நோயை கட்டுக்குள் வைத்திருக்க கருஞ்சீரகம் மிகவும் உதவுகிறது. எனவே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கருஞ்சீரகத்தை காலையில் வெறும் வயிற்றில் கருப்பு தேநீருடன் கலந்து அருந்துவது நல்லது.

வெறும் வயிற்றில் நீருடன் கலந்து கருஞ்சீரகத்தை சாப்பிடுவது மூளையின் செயல்பாட்டை ஊக்குவித்து ஞாபக சக்தியை அதிகரிக்கும்.

உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் கருஞ்சீரகத்தை சாப்பிடுவது நல்ல பலனை அளிக்கும். வெதுவெதுப்பான நீருடன் கருஞ்சீரகத்தை கலந்து அருந்துவது சிறப்பு.

கருஞ்சீரகத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள், முடி மற்றும் சருமத்தை ஆரோக்கியமாகவும் பொலிவுடனும் வைத்துக் கொள்ள மிகவும் உதவுகிறது. மேலும் முகப்பருக்கள் நீங்கவும் கருஞ்சீரகம் உதவுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோடையில் உடலை குளிர்ச்சியாக்கும் எண்ணெய் குளியலை எவ்வாறு செய்வது...?