Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பலவிதமான சருமம் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் ஓமம் !!

Omam
, வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (17:59 IST)
ஓமம் ஏராளமான ஊட்டச் சத்துகளை கொண்டுள்ளது. ஓமத்தில் புரோட்டின், பைபர், சோடியம், பொட்டாசியம், கால்சியம், வைட்டமின் B1, B3, கொழுப்பு, மினரல், கார்போஹைட்ரேட், இரும்பு, பாஸ்பரஸ் உள்ளிட்ட சத்துக்கள் இடம்பெற்றுள்ளன.


ஓமம் உடலில் உணவு செரிமானத்தை சீராக நடைபெற செய்ய உதவுகிறது. அஜீரணக் கோளாறு, வாயு தொல்லை உள்ளிட்ட பிரச்சனைகளை சரிசெய்து, அதனால் ஏற்படக்கூடிய வயிற்றுவலியை போக்குகிறது.

மலச்சிக்ககல் பிரச்சனையை சரி செய்கிறது. குடல், வயிறு, உணவுக்குழாய் பகுதிகளில் உள்ள புண்களை குணப்படுத்தும் ஆற்றலையும் ஓமம் கொண்டுள்ளது.

சளி மற்றும் இருமல் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு ஓமம் ஒரு சிறந்த மருந்துப் பொருளாக விளங்குகிறது. நுரையீரலுக்கான காற்றோட்டத்தை அதிகரிக்க ஓமம் உதவுகிறது. இதனால் இருமல் தொல்லையில் இருந்து நமக்கு நிவாரணம் கிடைக்கிறது.

சளியை வெளியேற்றுகிறது. இதன் மூலம் மூக்கடைப்பு தொல்லையில் இருந்தும் நமக்கு நிவாரணம் கிடைக்கிறது. சருமத்தின் ஆரோக்கியத்தையும், அழகையும் மேம்படுத்த ஓமம் உதவுகிறது.

ஓமத்தை பேஸ்டாக செய்து அதனை சருமத்தில் பயன்படுத்துவதன் மூலம் சரும ஆரோக்கியம் மேம்படும். முகப்பருக்கள், கரும்புள்ளிகள், சுருக்கங்கள் போன்ற பலவிதமான சருமம் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வாக ஓமம் திகழ்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆயில் புல்லிங் ஏன் எப்படி செய்யவேண்டும் தெரியுமா...?