Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தீபாவளிப் பண்டிகையை பிற மதத்தவரும் கொண்டாட காரணம் !

தீபாவளிப் பண்டிகையை பிற மதத்தவரும் கொண்டாட காரணம் !

ஏ.சினோஜ்கியான்

, வியாழன், 12 நவம்பர் 2020 (23:34 IST)
14 ஆண்டுகள் வனவாசம் முடிந்து ராமன் தனது மனைவி சீதாவுடனும் தம்பி லட்சுமனனுடனும் அயோத்தி  திரும்பிய நாளை தீபாவளிப் பண்டியையாகக் கொண்டாடுவர். அதேபோல் நரகாசுரனை கண்ணன் வதம் செய்த நாளையும் தீபாவளிப் பண்டிகையாகக் கொண்டாடுவர்.

அதாவது வரிசையாக தீபங்களை வைத்தலே தீபாவளி சொல்லின் பொருளாகும். வட இந்தியாவில் இந்து புத்தாண்டாக இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இந்திய தவிர நம் இந்தியர்கள் உள்ள மலேசியா, அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளிலும் இப்பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

மேலும் இந்துகளைத் தவிர சமணர்களும் சீக்கியர்களும் இப்பண்டிகையைக் கொண்டாடுவர்.
webdunia

சமண மதக் கடவுள் மகாவீரர் இம்மாதத்தில்தான் நிர்வாணம் எனப்படும் மோட்சத்தை அடைந்ததால் அவரது நினைவாக சமண மதத்தினர் தீபாவளியை கொண்டாடுகின்றனர்.
சீக்கியர்களின் ஆறாவது மதகுருவான ஹர்கோபிந்த், முகலாய மன்னர் ஜஹாங்கீரின் சிறைத்தண்டனையிலிருந்து தப்பிய நான் என்பதாலும் இதே நாளிதான் அமிர்தரஸில் உள்ள பொற்கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டதாலும் சீக்கியவர்கள் இப்பண்டிகையை பண் தி சோர் திவாஸ் என்று கொண்டாடுகின்றனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தீபாவளி பண்டிகையின் முக்கிய விஷயங்கள்…