Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பணமதிப்பிழப்பும் இந்திய பொருளாதார வீழ்ச்சியும்!

Webdunia
செவ்வாய், 7 நவம்பர் 2017 (17:49 IST)
நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மேற்கொண்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் இந்திய பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சி அடைந்தது.


 

 
கடந்த ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி உயர் மதிப்பிலான 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி திடீரென அறிவிப்பு ஒன்றை வெளியிடுகிறார். இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் மொத்த இந்தியாவும் அதிர்ந்து போனது. தினசரி புழக்கத்தில் இருக்கும் ரூபாய் நோட்டுகள் செல்லது என அறிவிக்கப்படுகிறது. இதனால் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது.
 
இதைத்தொடர்ந்து சில்லரை தட்டுபாடு, மற்ற ரூபாய் நோட்டுகளும் அதிக அளவில் இல்லை. ஒரு மாதம் காலம் எல்லா ஏடிஎம் இயந்திரங்களும் முடங்கிபோனது. வங்கிகளிலும் ரூபாய் நோட்டுகள் தட்டுபாடு. 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்கு பதில் புதிய 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது.
 
ஆனால் உடனே வெளியாகவில்லை. சிறிது அளவில்தான் முதலில் அச்சிட்டு வங்கிகளுக்கு அனுப்பட்டது. அதன்பின்னர் ஏடிஎம் இயந்திரங்களை புதிய ரூபாய் நோட்டுகளுக்கு ஏற்றபடி சரி செய்தனர். அப்போதும் ஏடிஎம் இயந்திரங்களில் வழக்கம் போல் பணம் இருப்பு இல்லை.
 
பகுதிக்கு ஒரு ஏடிஎம் என்ற கணக்கில் பணம் நிரப்பட்டது. இதனால் 2018ஆம் பிப்ரவரி மாதம் வரை பணம் மதிப்பு குறைத்தல் நடவடிக்கையின் பாதிப்பு இருந்தது. குறிப்பாக நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி ஆகிய மாதங்களில் பொதுமக்கள் வங்களிலும் பணம் எடுக்க முடியாமல், ஏடிஎம் இயந்திரங்களிலும் பணம் எடுக்க முடியாமல் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
 
வங்கிகளிலும் பணம் தட்டுபாடு ஏற்பட்டது. வங்கி கணக்கில் பணம் இருந்தும் எதுவும் பயன்படுத்த முடியாமல் கஷ்டப்பட்டனர். எல்லோரும் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாறுங்கள் என மத்திய அரசு தெரிவிக்கிறது. ஆனால் எல்லா இடங்களிலும் டிஜிட்டல் முறை அமல்படுத்தவில்லை. அரசு சார்ந்த இடங்களிலும் கூட டிஜிட்டல் முறை கிடையாது.
 
இந்தியாவில் கள்ள பணம், ஊழல் மற்றும் கருப்பு பணம் ஆகியவற்றை ஒழிக்கவே இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். நாட்டு நலனுக்காக இந்திய குடிமக்கள் இதனை தாங்கிக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.
 
பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் பாதிக்கப்பட்டது. தடை செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகள் நாட்டின் ஒட்டுமொத்தமாக 86% புழக்கத்தில் இருந்தவை. குறிப்பாக 68% பண பரிவர்த்தனையாக இருந்தது.
 
இதனால் மார்ச் மாத இறுதியில் வங்கிகளின் வளர்ச்சி 53% குறைந்து காணப்பட்டது. பெரிய அளவிலான தொழிலாளர்களும், தொழில் நிறுவனங்களுக்கு பெரிய அளவில் எந்த பாதிப்பும் இல்லை. அவர்கள் ஏற்கனவே டிஜிட்டல் முறை பரிவர்த்தனையை பயன்படுத்தி வருகின்றனர். 
 
ஆனால் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பெரிய அளவில் பாதிப்பை சந்தித்தது. சிறு, குறு தொழில்களில்தான் பண புழக்கம் அதிகம். இன்றும் சிறு தொழில் நிறுவனங்கள் பணப் பரிவர்த்தனை முறையையே கடைபிடித்து வருகின்றனர்.
 
ரூபாய் நோட்டுகள் செல்லாமல் போனதால் தொழில்கள் பாதிக்கப்பட்டது. பொருட்கள் வாங்க முடியாமலும், விற்க முடியாமலும் பெரும் அவதிப்பட்டனர் சிறு, குறு தொழிலாளர்கள்.
 
இந்தியை சந்தியின் மதிப்பும் குறைந்து காணப்பட்டது. இதனால் சர்வதேச சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்தது. ஆசிய சந்தையின் பழைய ஜப்பானின் சந்தை மதிப்பு வீழ்ச்சி அடைந்ததை விட இந்திய சந்தை மதிப்பு வீழ்ச்சியடைந்தது.
 
ஜப்பான் சந்தை மதிப்பு 12.59 புள்ளி வீழ்ச்சியடைந்தது. இந்தியாவின் சந்தை மதிப்பு 15.9 புள்ளி வீழ்ச்சியடைந்தது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை இந்திய பொருளாதாரத்தை பெரிதும் பாதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments