Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கெத்து காட்ட நினைத்து சிறைக்கு செல்லும் பாஜக நிர்வாகி

Advertiesment
bjp
ஆயுதங்களை இடுப்பில் மறைத்து வைத்து வெளியில் எடுப்பது போன்று வீடியோ வெளியிட்ட பாஜக இளைஞர் அணி மதுரை மாவட்ட செயலாளர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளார்.
 
இணையதள யுகத்தில் சமூக வலைதளங்கள் மலிந்துள்ள இன்றைய காலத்தில் இளைஞர் உள்ளிட்ட பலரும் ரீல்ஸ் வெளியிட்டு அதில் லைக்ஸ், வியூஸ் பெற பல வகையாக உத்திகளை கையாள்கின்றனர்.

இந்த நிலையில், ஆயுதங்களை இடுப்பில் மறைத்து வைத்து வெளியில் எடுப்பது போன்று வீடியோ வெளியிட்ட பாஜக இளைஞர் அணி மதுரை மாவட்ட செயலாளர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு கோவையில் எடுக்கப்பட்ட இந்த வீடியோ தற்போது வைரலான நிலையில், தல்லாகுளம் காவல் நிலயத்தில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும்  பாஜக இளைஞர் அணி மதுரை மாவட்ட செயலாளர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராமர் கோயில் குடமுழுக்கிற்காக இலங்கையிலிருந்து மதுரை கொண்டுவரப்பட்ட ராமர் பாதம்