Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அண்ணா என்னும் அற்புதம்

Advertiesment
அண்ணா என்னும் அற்புதம்
, சனி, 15 செப்டம்பர் 2018 (12:27 IST)
ஆலம் விழுதுகள் போல் தலைவர்கள் ஆயிரம் வந்தும் என்ன
வேர் என நீ இருந்தாய் அண்ணா !
பேச்சு, எழுத்து, பதிப்பு என அனைத்திலும் முத்திரை பதித்தாய் அண்ணா !
 
   

பெரியாரில் இருந்து நீ
பெரியாரை நீ
உன் ஆட்சி பெரியாருக்குக்  காணிக்கை
நீயோ எங்களின் அன்பாய் ஆனாய் அண்ணா !

நீ பிறக்காது இருந்தால் ஒரு இனம் டார்வின் சொன்னதுப் போல்
தக்கனத் தப்பிப்பிழைத்து இருக்காது அண்ணா !

சுயமரியாதைத் திருமணம் தந்தாய்
மூன்று மொழி கொள்கை தந்தாய்
தமிழகம் என்ற பெயர்த் தந்தாய் அண்ணா !

எத்தனை அடி ஆழம் எடுத்தாய் அண்ணா !
சமூக நீதிக்கு எதிரான சக்திகளைப் புதைக்க
இன்னும் எழவே இல்லை அண்ணா !

படைத்தவன் மேல் பழியுமில்லை.
பசித்தவன் மேல் பாவம் இல்லை.
கிடைத்தவர்கள் பிரித்துக்கொண்டிருக்கிறார்கள்
மக்கள்  தெருவில் நிற்கிறார்கள்
எழுந்து வா எங்கள் அண்ணா !

நடப்பது  சயனைடு குப்பி க்கள் ஆட்சி
எங்கே சென்றாய் அண்ணா !
சூரியனாய் நீ இருளில் நாங்கள்
எங்கே சென்றாய் அண்ணா
எங்களைத் தவிக்க விட்டு

அண்ணா உன் மூச்செல்லாம், பேச்செல்லாம் இலட்சிய கீதம்
உன் எழுத்தோவியம் அது தமிழின் இலக்கணம்
ஜன நாயகம் இங்கு மது அருந்தி ஆட்டம் போடுகிறது
அதை பேய் ஓட்ட வாருங்கள் எங்கள் அண்ணா

நாங்கள் உடைந்து போக வில்லை
இன்னும் ஒரு ஒளி விளக்கிற்காகக் காத்து இருக்கிறோம்
நெஞ்சம் எல்லாம் அண்ணா என்ற வண்ண மயம்
கண்கள்  எல்லாம் அண்ணா என்ற சொல் மயம்


webdunia



இரா காஜா பந்தா நவாஸ்
[email protected]

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

10 வயது சிறுமியை கற்பழித்து பிளாட்பாரத்தில் வீசிய அயோக்கியன்