திறன் பேசிகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் உயிர் ஆபத்துக்களையும், உடல் கோளாறுகளையும் பற்றிக் கண்டறிய உதவியமைக்காக வாஷிங்டன் பல்கலைக் கழகத்தில் பயின்று வரும் தமிழக ஆராய்ச்சி மாணவியான ராஜலட்சுமி அமெரிக்காவின் சிறப்பு வாய்ந்த மார்கோனி சொசைட்டி பால் இளையோர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.இது குறித்த செய்திகள் நாளிதழ்களிலும் வெளியாகியிருந்தன.
இயல்பாகப் பயன்படுத்துகின்ற அந்த திறன் பேசியை எவ்வாறு மனித உடலியக்கம், மூச்சு விடுதல் ,உள்ளிட்ட உடல் சார்ந்த செயல் பாட்டை அளவிடும் அமைப்பாக மாற்ற முடியும் என்பது குறித்து அவர் ஆராய்ச்சி செய்து ஒரு தொழில் நுட்பத்தை கண்டறிந்துள்ளார். இந்தக் கருவியை நாம் உடலுடன் பொருத்திக் கொள்ளத் தேவையில்லை என்பதே இதன் சிறப்பம்சமாகும்.
தமிழர்கள் பல துறைகளில் முன்னேற்றம் கண்டு உலக அளவிலும் நம் தேசத்திற்கு பெருமை சேர்த்து வருகிறார்கள் என்பது தமிழர்களாகிய நாம் பெருமைப்பட வேண்டிய ஒன்றாகும்.