Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துக்கடா ப்ளேயர் என விமர்சித்த வர்ணனையாளர்: விட்டு விளாசிய ஜடேஜா!

Webdunia
வியாழன், 4 ஜூலை 2019 (10:00 IST)
தன்னை விமர்சித்த வர்ணனையாளர் சஞ்சய் மஞ்சரேகரை இந்திய கிரிக்கெட் வீரர் ஜடேஜா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 
 
உலகக்கோப்பை தொடர் நடைபெற்று வரும் நிலையில் போட்டியின் வர்ணனையாளர்களாக பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் உள்ளனர். வர்ணனையாளர்களுள் முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்சரேக்கரும் ஒருவர். 
 
ஐபிஎல் போட்டிகளுக்கு இவர் வர்ணனையாளராக இருந்த போதே இவரின் வர்ணனை மீது விமர்சனங்கள் பல எழுந்தது. இது இப்போது உலகக்கோப்பை தொடரிலும் தொடர்கிறது. மஞ்சரேக்கர் வர்ணனையின் போது தனது சொந்த விருப்பு வெறுப்பகளை வெளிப்படுத்துகிறார் என விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன. 
அந்த வகையில் இவர் தோனி குறித்து பேசியபோதும் அது சர்ச்சையானது, அதனை தொடர்ந்து ஜடேஜாவை துண்டு துக்கடா வீரர் எனவும், நான் கேப்டனாக இருந்தால் ஜடேஜாவை அணியில் சேர்க்க மாட்டேன் எனவும் தெரிவித்திருந்தார். 
 
இதனால் கடுப்பான ஜடேஜா, நீங்கள் விளையாடியதைவிட நான் இரண்டு மடங்கு அதிகமாகவே விளையாடி உள்ளேன். இன்னும் விளையாடிக் கொண்டிருக்கிறேன். சாதனை செய்தவர்களை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள். உங்களது வாய்மொழி வயிற்றுப்போக்கை இதோடு நிறுத்துக்கொள்ளுங்கள் என சஞ்சய் மஞ்சரேக்கரை விளாசியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் போட்டியில் விளையாடாமல் வெளியேறுவோம்.. ஐதராபாத் அணி எச்சரிக்கை..!

நீங்கள் எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும், எல்லா முறையும் அது நடக்காது.. தோனி குறித்து சேவாக் கருத்து!

தோனியின் மூட்டுத் தேய்மானம் அடைந்துள்ளது… உண்மையைப் போட்டுடைத்த சி எஸ் கே பயிற்சியாளர்!

ரியான் பராக்கிற்கு அபராதம்.. கேப்டன் பதவியை ஏற்கும் சஞ்சு சாம்சன்!

இவ்ளோ சீன் போடுறது நல்லதில்ல..! ரசிகர்களை அவமதிக்கும் விதமாக நடந்துகொண்ட ரியான் பராக்!

அடுத்த கட்டுரையில்
Show comments