Publish Date: Mon, 01 Oct 2018 (18:24 IST)
Updated Date: Mon, 01 Oct 2018 (18:39 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் தற்போதைய கிரிக்கெட் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ரேக்கர் தோனியைக் குறித்து விமர்சித்துள்ளார்.
பிரபல தனியார் விளையாட்டு சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறுயுள்ளதாவது.
"பிரபல கிரிக்கெட் வீரரும் முன்னாள் கேப்டனான தோனி இங்கிலாந்துக்கு இடையேயான போட்டியிலும் பெரிதாக சோபிக்கவில்லை. அதேபோல நடந்து முடிந்துள்ள ஆசிய கோப்பையிலும் அவருடைய பங்களிப்பு பெரிதாக இல்லை. அவர் மீது ரசிகர்கள் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றும் பொருட்டாவதும் அவருடைய கள - விளையாட்டு சிறப்பாக இருக்க வேண்டும். ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அவர் பூர்த்தி செய்வதில்லை .
எனவே ரசிகர்கள் தோனியின் மீது வைக்கும் எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நல்லது. இனி வரும் காலத்தில் அவர் பெரிதாக பேட்டிங் செய்து எதிர்பார்ப்புகளை எல்லாம் அவர் பூர்த்தி செய்வார் என்ற நம்பிக்கை எனக்கும் இல்லை. அவர் மீது எனக்கு இருந்த நம்பிக்கையும் குறைந்துவிட்டது.
ஆனால் அடுத்த வருடம் வரவிருக்கும் உலக கோப்பை போட்டியில் கோலி தலைமையிலான அணியில் பங்கேற்கும் தோனி, கேப்டன் கோலிக்கு உறுதுணையாக இருந்து அவரது அனுபவத்தை கொடுக்க வேண்டும் " இவ்வாறு அவர் கூறியிருக்கிறர்.