Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அரையிறுதிக்கு பாகிஸ்தான் தகுதி பெற என்ன செய்ய வேண்டும்?

Advertiesment
அரையிறுதிக்கு பாகிஸ்தான் தகுதி பெற என்ன செய்ய வேண்டும்?
, வியாழன், 4 ஜூலை 2019 (06:20 IST)
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் ஒரு கட்டத்தில் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருந்த நியூசிலாந்து நேற்று நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 119 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்ததால் இன்னும் அரையிறுதிக்கு கூட முற்றிலும் தகுதி பெறாமல் உள்ளது
 
ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய மூன்று அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில் அரையிறுதிக்கு தகுதி பெறும் 4வது அணி எது? என்பது நாளை நடைபெறும் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான போட்டி முடிந்த பின்னரே தெரியும்
 
தற்போது நியூசிலாந்து அணி 11 புள்ளிகளுடன் 0.175 என்ற ரன்ரேட்டை கைவசம் வைத்துள்ளது. பாகிஸ்தான் அணி 9 புள்ளிகளுடன் -0.792 என்ற ரன்ரேட்டை வைத்துள்ளது நாளைய போட்டியில் பாகிஸ்தான் அணி 316 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே அந்த அணி அரையிறுதிக்கு தகுதி பெறும். அதாவது பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து 400 ரன்கள் எடுத்து, பின்னர் வங்கதேசத்தை 84 ரன்களுக்குள் சுருட்ட வேண்டும். இப்படி ஒரு அதிசயம் நடந்தால் பாகிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெறும், இல்லையேல் அரையிறுதிக்கு தகுதி பெறும் நான்காவது அணியாக நியூசிலாந்து இருக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நியூசிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு சென்றது இங்கிலாந்து!