Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

14 வருடங்களுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அணி!

Advertiesment
14 வருடங்களுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அணி!
, வியாழன், 10 டிசம்பர் 2020 (11:04 IST)
தென் ஆப்பிரிக்கா அணி அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட்கள் மற்றும் 3 டி 20 போட்டிகளில் விளையாட உள்ளது.

2009 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை வீரர்கள் சென்ற பேருந்து மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் எந்த வீரருக்கும் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை என்றாலும், அதன் பிறகு எந்த நாட்டு கிரிக்கெட் வாரியமும் பாகிஸ்தானுக்கு செல்ல அஞ்சி வந்தனர். அதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தும் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்டன.

இந்நிலையில் இப்போது பாகிஸ்தான் சென்று கிரிக்கெட் விளையாட சில அணிகள் முன்வந்துள்ளன. அதையடுத்து தென் ஆப்பிரிக்க அணி அடுத்த ஆண்டு பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டி 20 போட்டிகள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. 14 ஆண்டுகளுக்குப் பிறகு தென் ஆப்பிரிக்க அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கால்பந்து போட்டியின்போது மோது: துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலி!