Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சஹாலைத் துரத்தும் இறுதிப் போட்டி துரதிர்ஷ்டம்… இந்த முறை வரலாற்றை மாற்றுவாரா?

vinoth
செவ்வாய், 3 ஜூன் 2025 (07:32 IST)
18 ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் இறுதிக்கட்டத்துக்கு நெருங்கியுள்ளோம். ராயல் சேல்ஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் லெவன் ஆகிய இரு அணிகளும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளன. இந்த இரு அணிகளும் லீக் போட்டிகளில் முதலிரண்டு இடங்களைப் பிடித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இரு அணிகளும் இதுவரை கோப்பை வெல்லாத அணிகள் என்பதால் கோப்பை வெல்லாத ஒரு அணி இந்த சீசனில் சாம்பியன் பட்டம் வெல்வது உறுதியாகியுள்ளது. 14 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படிக் கோப்பை வெல்லாத அணிகள் இறுதிப் போட்டியில் மோதுகின்றன.

இந்நிலையில் பஞ்சாப் அணியில் இடம்பெற்றிருக்கும் யஷ்வேந்திர சஹால் பற்றி ஒரு தகவல் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சாஹல் இதுவரை இரண்டு முறை இரண்டு அணிகளுக்காக ஐபிஎல் இறுதிப் போட்டி ஆடியுள்ளார். ஆனால் அந்த இரண்டு முறையுமே அவர் விளையாடிய அணித் தோற்றுள்ளது. 2016 ஆம் ஆண்டு பெங்களூர் அணிக்காகவும், 2022 ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காகவும் அவர் இறுதிப் போட்டியில் விளையாடியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜிம்மில் ஏற்பட்ட காயம்… மீதமுள்ள போட்டிகளில் இருந்தும் விலகும் இந்திய வீரர்!

சாம்பியன்ஸ் லீக் தொடர் மீண்டும் தொடங்குவது எப்போது?..ஐசிசி கூட்டத்தில் ஆலோசனை!

டி 20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த ஜோஸ் பட்லர்!

கம்பீருக்கு ஆல்ரவுண்டர்கள் அதிக பாசம்… ஆனால் அணிக்குள் மூன்று பேர் எதற்கு?- அஜிங்யா ரஹானே கேள்வி!

கோலி ஆக்ரோஷமாக செயல்பட்டாலும் அதில் கிங்… ஆனால் கில்?- சஞ்சய் மஞ்சரேக்கர் விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments