Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முதல் முறையாக குழந்தையை ரசிகர்களுக்குக் காட்டிய யுவ்ராஜ்! வைரல் picture!

Advertiesment
முதல் முறையாக குழந்தையை ரசிகர்களுக்குக் காட்டிய யுவ்ராஜ்! வைரல் picture!
, புதன், 11 மே 2022 (10:18 IST)
யுவ்ராஜ் சிங் ஹசல் கீச் தம்பதியினருக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது.

2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பை நாயகன் யுவ்ராஜ் சிங், அதற்கடுத்து 2015 மற்றும் 2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடர்களில் விளையாட முடியாத சூழல் உருவானது. ஆனால் இடையிடையில் அவர் அணிக்குள் வருவதும் மீண்டும் தூக்கப்படுவதுமாக இருந்தார். பின்னர் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

யுவ்ராஜ் சிங் ஹசல் கீச் என்ற மாடல் நடிகையைத் திருமணம் செய்துகொண்டார். இவர் தமிழில் அஜித் நடித்த பில்லா திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு சமீபத்தில் ஆண்குழந்தை பிறந்தது. ஆனால் இதுவரை குழந்தையின் புகைப்படத்தை வெளியிடாமல் இருந்தனர். இந்நிலையில் தற்போது இருவரும் மருத்துவமனையில் குழந்தையோடு இருக்கும் புகைப்படம் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐபிஎல் 2022: டெல்லி-ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல்