Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

PLAY OFFS போகலன்னா அதுவே உலகத்தோட முடிவு கெடயாது… தோனி சென்ன ‘கூல்’ பதில்!

Advertiesment
PLAY OFFS போகலன்னா அதுவே உலகத்தோட முடிவு கெடயாது… தோனி சென்ன ‘கூல்’ பதில்!
, திங்கள், 9 மே 2022 (16:25 IST)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்ளே ஆஃப் செல்வதற்கான வாய்ப்புகள் கிட்டத்தட்ட இல்லாமல் ஆகிவிட்டது.

நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் தொடங்கி சிறப்பாக நடந்து வரும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறது. அணியின் முந்தைய கேப்டன் தோனிக்கு பதிலாக இந்த முறை கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டார். ஆனால் ஜடேஜா கேப்டன் ஆனது முதலாக அணி தோல்வியை சந்தித்து வரும் நிலையில் ஜடேஜாவாலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த இயலவில்லை. இதனால் தான் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாகவும், மீண்டும் தோனியே கேப்டன் பதவியை வகிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து சென்னை அணி விளையாடிய 3 போட்டிகளில் இரண்டை வென்றுள்ளது. நேற்றைய போட்டியில் சென்னை அணி டெல்லி அணியை 91 ரன்கள் வித்தியாசத்தில் வென்று முதல் முறையாக கடைசி இரண்டு இடத்திலிருந்து முன்னேறி 8-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. நேற்று படுதோல்வி அடைந்ததால் டெல்லி அணி புள்ளி பட்டியலில் வீழ்ச்சியடைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை அணிக்கு இன்னும் மூன்று போட்டிகள் உள்ள நிலையில் மூன்று போட்டிகளிலும் இதே ரீதியில் அதிகபட்ச ரன் ரேட்டில் வெற்றி பெற்றால் சென்னை அணிக்கு பிளே ஆஃப் செல்ல வாய்ப்பு உள்ளது. ஆனால் அதே நேரத்தில் பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் அணிகள் அடுத்து வரும் போட்டிகளில் தோல்வி அடைய வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ப்ளே ஆஃப் செல்வதற்கான வாய்ப்புக் குறித்து பேசியுள்ள தோனி “நான் கணக்கில் மிகப்பெரிய ஆள் இல்லை. பள்ளியில் கூட கணிதத்தில் நான் சிறப்பான மாணவன் இல்லை. அதனால் புள்ளிவிவரங்களை பார்ப்பது உதவாது. அடுத்த போட்டியை சிறப்பாக ரசித்து விளையாட வேண்டும். நாங்கள் ப்ளே ஆஃப்க்கு சென்றால் நல்லது. செல்லாவிட்டாலும் அதுவே உலகத்தின் இறுதி அல்ல” எனக் கூலாக பதில் சொல்லியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

”எனக்கு கிடைக்க வேண்டிய மரியாதை கிடைக்கவில்லை”…Comeback பற்றி கிறிஸ் கெய்ல் நம்பிக்கை!