இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவ்ராஜ் சிங் அளித்த நேர்காணல் ஒன்றில் பல சுவாரஸ்யமான சம்பவங்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.
இந்திய அணிக்குக் கபில்தேவுக்குப் பின் கிடைத்த மிகச்சிறந்த பேட்டிங் ஆல்ரவுண்டர்களில் ஒருவர் யுவ்ராஜ் சிங். 2007 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் இந்திய அணி உலகக்கோப்பை வெல்ல முக்கியக் காரணியாக இருந்தவர். சமீபத்தில் அவர் சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இந்நிலையில் இப்போது அவர் அளித்துள்ள ஒரு நேர்காணலில் தனது அறிமுகப்போட்டிக்கு முதல் நாள் தூக்கமில்லாமல் தவித்தது குறித்து பேசியுள்ளார். அதில் “ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிக்கு முன்பாக என்னிடம் வந்த கங்குலில் ஓப்பனராக இறங்குகிறாயா” எனக் கேட்டார். நான் “அதுதான் உங்கள் விருப்பம் என்றால் எனக்கு சம்மதம்” எனக் கூறினேன். ஆனால் அன்று இரவு முழுவதும் நான் உறங்கவில்லை.
கங்குலி அப்படி சொல்லி இருந்தாலும் அடுத்த நாள் யுவ்ராஜ் ஐந்தாவது வீரராகதான் களமிறக்கப்பட்டார். அந்த போட்டியில் 84 ரன்கள் சேர்த்து ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.