RCB அணியின் தூண்களில் ஒருவரான விராட் கோலி மோசமான ஃபார்மில் தற்போது இருக்கிறார்.
முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலி இப்போது மோசமான ஆட்டத்திறனில் உள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே அவர் சதம் அடிக்கவில்லை. தொடர்ந்து சதங்களாக்க குவித்து ரன் மெஷின் என அழைக்கப்பட்ட அவர் இப்போது மோசமான பார்மில் இருக்கிறார். சமீபத்தைய இரண்டு ஐபிஎல் போட்டிகளிலும் அவர் முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார்.
இந்நிலையில் கோலி கடைசியா சதம் அடித்து 100 போட்டிகளைக் கடந்துவிட்டார். சர்வதேச மற்றும் ஐபிஎல் என அனைத்து விதமான போட்டிகளையும் சேர்த்து அவர் கடந்த 100 இன்னிங்ஸ்களில் சதமே அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் RCB அணி RR அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் கோலி தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கினார். ஆனாலும் 9 ரன்கள் மட்டுமே சேர்த்தார். இந்த சீசனில் 2 முறை டக் அவுட் மற்றும் பல முறை ஒற்றை இலக்க எண்களில் ஆட்டமிழந்து வருகிறார் கோலி.